அரசியல் பழி வாங்கல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 5 பேர் அந்த ஆணைக்குழுவில் இன்று முன்பகல் ஆஜராகியுள்ளனர்.
அவர்கள் இன்று (09) 10:45 மணியளவில் ஆணைக்குழுவின் ஆஜரானதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னிலையில் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போது ஜனாதிபதி ஆணைக்குழுவை அவமதிக்கும் வகையில் மேற்கொண்டிருந்த அறிவிப்பு ஒன்றை மேற்கொண்டதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு, அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தி நாட்டின் சட்டத்தை மீறி செயல்படுவதாக அவர்கள் குற்றம் சுமத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.