(க.பிரசன்னா)
பதுரலிய - கெலின்கந்த பிரதேசத்தில் இணையவழி கற்றலில் ஈடுபடும் மாணவர்கள் 4G இணைப்பை பெற்றுக்கொள்ளவதில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் சுட்டிக்காட்டப்பட்டதை தொடர்ந்து இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.
இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் பணிப்புரைக்கமைய ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் குறித்த பகுதிகளில் தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு 4G இணையத் தொடர்பின் ஊடாக மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இரண்டு வாரங்களுக்குள் கெலின்கந்த பிரதேசத்திற்கும் அதனை அண்டியுள்ள பகுதிகளுக்கும் தொடர்பாடல் வலையமைப்பை விரிவுபடுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.