Our Feeds


Thursday, November 12, 2020

www.shortnews.lk

சவுதியில் இதுவரை 34 இலங்கையர்கள் கொரோனாவினால் மரணம் - வெளிநாடுகளில் 98 மரணங்கள்

 



கொவிட்-19 தொற்று காரணமாக 98 இலங்கையர்கள் வெளிநாடுகளில் மரணித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


அவர்களுள் அதிகமானோரின் மரணங்கள் சவுதி அரேபியாவில் பதிவாகியுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் கொரோனா பிரிவு பணிப்பாளர் நாயகம் காண்டீபன் பாலா தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவில் 34 இலங்கையர்கள் மரணித்துள்ளனர்.

குவைத்தில் 21 பேரும், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் 10 பேரும், கட்டாரில் 6 பேரும், ஓமானில் 4 பேரும், பஹ்ரேன் மற்றும் ஜோர்தான் முதலான நாடுகளில் தலா இரண்டு பேரும், இஸ்ரேல் மற்றும் ஈரானில் தலா ஒவ்வொருவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தனர்.

அத்துடன், பிரித்தானியாவில் 5 பேரும், அமெரிக்கா மற்றும் கனடாவில் தலா 4 பேரும் ஜெர்மனி மற்றும் இத்தாலி முதலான நாடுகளில் தலா இரண்டு பேரும் மரணித்ததாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொவிட்-19 காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களில் 40000 இலங்கையர்கள் இதுவரையில் நாட்டுக்கு மீள அழைத்துவரைப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அவர்களில் மத்திய கிழக்கில் இருந்து 17 ஆயிரத்து 861 புலம்பெயர் தொழிலாளர்கள் அழைத்துவரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று நடைபெற்ற இலங்கையிலான இடம்பெயர்வு தொடர்பான ஐக்கிய நாடுகளின் வலையமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வில் தொலை காணொளி மூலம் நிகழ்த்திய உரையில் வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவசரநிலைகளின் போது உதவுவதற்குமாக 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' இணைய முகப்புத் தரவுத்தளம் நிறுவப்பட்டது.

மத்திய கிழக்கு தெற்கு ஐரோப்பா மற்றும் மலேசியா, கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இந்த தரவுத்தளத்தில் தற்போது 98,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.

கடந்த இரண்டு தசாப்தங்களில் புலம்பெயர்ந்த இலங்கையர்களின் எண்ணிக்கையில் பத்து மடங்கு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆண்டுக்கு சுமார் 2 இலட்சம் பேர் வெளியேறும் விகிதத்துடன் சுமார் 1.5 மில்லியன் புலம்பெயர்ந்தோர் வெளிநாடுகளில் பணி புரிவதாக தற்போதைய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

அவர்களில் சுமார் 8 இலட்சம் பேர் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பணிபுரிகின்றார்கள்.

தற்போதைய உலகளாவிய அமைப்பில், தொழில் இழப்பு மற்றும் வருமானக் குறைப்பு போன்றன உள்ளடங்கலான அதிகளவிலான சவால்களை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்கின்றனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டின், முதல் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் 2020 இன் முதல் அரையாண்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வெளிச்செல்லும் பயணம் 57.2 சதவீதமாக குறைந்துள்ளது.

இதற்கு முன்னர் ஆண்டுதோறும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை தேடிய சுமார் 2 இலடசம் இலங்கையர்களுடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க அளவிலான குறை எண்ணிக்கையாகும் என அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »