கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இதுவரை 32 கொவிட் 19 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜி.ஜயசூரிய தெரிவித்தார்.
அவர்களில் 20 பேர் சிறுவர்கள் எனவும் 12 பேர் கர்ப்பிணிகள் எனவும் அவர் தெரிவித்தார்.
அதைப்போல் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் வைத்தியருக்கு தொற்று குறித்த வைத்தியசாலையில் வைத்து ஏற்படவில்லை என அவர் மேலும் கூறினார்.
இந்த நிலைமை காரணமாக சிகிச்சை பெற்றுவதற்காக வைத்தியசாலைக்கு வருவோர் எவ்வித அச்சத்தையும் ஏற்படுத்தி கொள்ள தேவையில்லை என அவர் தொடர்ந்தும் தெரிவித்தார்.