கொரோனா, கொவிட்-19 வைரஸ் தொற்றினால் மரணிப்போரின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான வழக்கு எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள், சட்டத்தரணிகள் என பல தரப்பினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் மீதான மனுதாரர்களின் பக்க நியாயங்கள் இன்று வினவப்படும் என எதிர்பார்த்த நிலையில் எதிர்வரும் 30ம் திகதிக்கு வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.