Our Feeds


Monday, November 16, 2020

www.shortnews.lk

கொரோனாவுக்கான புதிய மருந்து 30 ஆயிரம் பேருக்கு நடத்திய பரிசோதனையில் 94.5 % வெற்றி

 



சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.


இந்த கொடிய வைரசுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன. ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன. தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் உலகம் முழுவதும் 11 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

இந்த நிறுவனங்களில் அமெரிக்காவின் மார்டனா இங்க் மருந்து நிறுவனமும் ஒன்று. அந்நிறுவனம் கொரோனா கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கி இருந்தது. இந்த தடுப்பூசியின் இறுதிகட்ட பரிசோதனைகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், மார்டனா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி 94.5 சதவீதம் திறன் கொண்டது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

30 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் தடுப்பூசி 94.5 சதவீதம் கொரோனா வைரசை கடுப்படுத்துவது உறுதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களிடமும் இந்த மார்டனா தடுப்பூசி நல்ல செயல்திறனை கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மற்றொரு அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபிப்சர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி 90 சதவீதம் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மனிதர்களை பாதுகாக்கிறது என ஆய்வு முடிவில் தெரியவந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »