இன்று இலங்கையில் கொரோனா தொற்றினால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களுடன் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் விபரம்...
1. கொழும்பு - 08 பகுதியை சேர்ந்த 87 வயது ஆண் - கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 26ம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொரோனா தாக்கத்துடன் பக்ரீரியா தாக்கமும் ஏற்பட்டுள்ளது.
2. பலபிட்டிய பகுதியை சேர்ந்த 80 வயது ஆண் - கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் முல்லேறியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 25ம் திகதி உயிரிழந்தார். குறித்த நபருக்கு அதிக இரத்த அழுத்தமும் ஏற்பட்டுள்ளது. நியுமோனியாவும் ஏற்பட்டுள்ளது.
3. பேலியகொட பகுதியை சேர்ந்த 73 வயது பெண் - கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 23ம் திகதி உயிரிழந்துள்ளார். நடத்தப்பட்ட பரிசோதனையில் இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவருக்கு உயர் இரத்த அழுத்தமும் இருந்துள்ளது.