2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு இன்று (17) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குறித்த ஒதுக்கீட்டு சட்டமூலத்தை இன்று (17) பாராளுமன்றத்தி முன்வைக்கவுள்ளார்.
2021 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் கடந்த ஒக்டோபர் மாதம் ஆறாம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டதுடன் அதற்கமைய கடந்த 20 ஆம் திகதி அதனை பிரதமர்; சபையில் முன்வைத்தார்.
2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் 4 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.
அதற்கமைய நாளை முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இந்த விவாதம் இடம்பெறவுள்ளது.
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.
மேலும் வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
வரவுச் செலவு திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்த முறை வரவுச் செலவு திட்டம் மீதான விவாத நாட்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு அறிவித்துள்ளது.
இன்று (17) பிற்பகல் 1.40க்கு பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில் அதன் பின்னரே நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வரவு செலவு திட்டத்தை சமர்பித்து உரையாற்றவுள்ளார்.
அது நாட்டின் 75 ஆவது வரவு செலவுத் திட்டமாக கருதப்படுகின்றது.
2021 ஆம் நிதியாண்டுக்கான அரச செலவீனம் 2.678 பில்லியன் ரூபாவாகும் மேலும் இலங்கைக்குள் அல்லது அதற்கு வெளியே 2,900 பில்லியன் ரூபா வரையறைக்கு உட்பட்டு கடன்களைப் பெறவும் வரவு செலவுத் திட்ட சட்டமூலத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
இவ்வாறு வரவுச் செலவுத் திட்டம் சபையில் பிரதமரால் சமர்பிக்கப்பட்டதும் அது தொடர்பில் அதாவது இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை (18) முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
அதனையடுத்து இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.
மேலும் வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
வரவுச் செலவு திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை பாராளுமன்ற அமர்வுகள் காலை 9.30 முதல் மாலை 5.30 வரை இடம்பெறவுள்ளது.
மேலும் வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
வரவுச் செலவு திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இவ்வாறு இன்று வரவுச் செலவுத் திட்டம் சமர்பிக்கப்படுவது முதல் அது தொடர்பான விவாதங்கள் இடம்பெறும் நாட்களில் முற்று முழுதாக சுகாதார வழிமுறைகளை கைக்கொள்வதற்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசாநாயக்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிதி அமைச்சின் அதிகாரிகள் மட்டுமே நாளை பாராளுமன்ற அமர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பட்ஜெட் விளக்கக்காட்சிக் காலத்தில் சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ் சபாநாயகர் கேலரியில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பொது கேலரி மற்றும் மீடியா கேலரி மூடப்பட்டிருக்கும்.
எனினும் பொது மக்கள் கூடம் நாளையும் மூடப்பட்டிருக்கும் என்பதோடு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜட் உரைக்கு பின்னர் நிதியமைச்சர் வழங்கும் சம்பிரதாயபூர்வமான தேநீர் விருந்துபசாரம் இந்த வருடமும் இடம்பெறும் என்பதோடு இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் வருந்தினர்கள் மட்டுமே கலந்துக்கொள்ள அனுமதி உள்ளது.