முழு உலகையும் பாதித்துள்ளது கொரோனா தொற்று காலத்தில் மனதில் நேர்மறையான எண்ணங்களை (Positive thoughts) ஏற்படுத்திக் கொள்வதன் ஊடாக அதனை வெற்றிகொள்ள முடியும் என வியாபாரி தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார்.
நேற்று (16) இரவு ஔிபரப்பான தெரண 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னரும் பலமுறைகள் கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் இது 7 ஆவது முறையாக ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வைரஸ் 8 - 10 நாட்கள் இருக்கும் எனவும் 6 - 7 நாட்களுக்கு தான் இன்மொரு நபருக்கு பரவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுபோன்று 60 முறை ஏற்படின் 369 நாட்களில் இவ்வாறு தொற்றுக்கு உள்ளானர்களிடம் இருந்து வைரஸ் பரவும் தாக்கம் குறைவடையும் எனவும் அப்படி பார்ப்போமேயானால் அடுத்த வருடம் மார்ச் மாதம் 15 ஆம் திகதியுடன் இது குறைவடையும் என அவர் தெரிவித்துள்ளார்.
எங்கள் அனைவரும் ஒரு நேர்மறையான இலக்கு இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.