பிரென்டிக்ஸ் நிறுவனமானது, தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை மீறவில்லை என, இதுவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் நடத்திய விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக, பொலிஸ் தகவல்கள் தெரிவித்துள்ளன.
பிரென்டிக்ஸ் கொரோனா கொத்தணியின் பொலிஸ் விசாரணை நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து, பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்னவால், சட்டமா அதிபர் தப்பல டீ லிவேராவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பான இடைக்கால அறிக்கையை குற்றப்புலனாய்வு பிரிவினர் கையளித்துள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்த கொரோனா 2ஆவது அலையானது, ஐரோப்பிய நாடுகளில் பரவியுள்ள கொரோனா தொறி;றிலிருந்து பரவியிருப்பதாக பிரன்டிக்ஸ் கொத்தணி தொடர்பில், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.