ஹினிதும பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 16 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த அதிகாரிகளுக்கு இன்றைய தினம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
ஹினிதும பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலையின் கைதிகள் 12 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, சிறைக்கைதிகள் 172 பேருக்கு இதுவரை கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் 19 தொற்றை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.