Our Feeds


Saturday, November 7, 2020

www.shortnews.lk

கொவிட்-19தொடர்பில் அறிந்துக்கொள்ள வேண்டிய 10 புதிய செய்திகள்...!‎

 

 கொவிட்-19 தொடர்பில் அறிந்துக்கொள்ள வேண்டிய 10 புதிய செய்திகள்...!

கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன? - BBC News  தமிழ்

‎* கொவிட் 19 நோய்க்காக சிகிச்சைப் பெற்றுவந்த கொழும்பு ‎முகத்துவாரத்தைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவர்          ‎‎ உயிரிழந்தநிலையில், இலங்கையில் கொவிட் 19 நோயினால் ‎மரணித்தவர்களின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது.

‎* இலங்கையில் இதுவரையில் 12970 பேருக்கு கொவிட் 19 ‎தொற்றுறுதி செய்யப்பட்டிருப்பதுடன், மினுவாங்கொடை ‎ப்ரெண்டிக்ஸ்      மற்றும் பேலியகொடை மீன்சந்தை ஆகிய ‎இரட்டைக் கொத்தணிகளில் கொவிட்19 நோயுடன் அடையாளம் ‎காணப்பட்டவர்களின்      எண்ணிக்கை 9492ஆக அதிகரித்துள்ளது.

‎* வெலிக்கடை சிறையில் நேற்றையதினம் 23 கைதிகளுக்கு ‎கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், ‎மொத்தமாக       அங்கு 30 கைதிகள் தொற்றுடன் அடையாளம் ‎காணப்பட்டிருக்கின்றனர்.

‎* ஹட்டனில் மேலும் 2 பேருக்கும், மட்டக்களப்பு செங்கலடியில் ஒரே ‎குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கும் தலவாக்கலை, மிடில்டன் ‎பகுதியில் பெண்ணொருவருக்கும், யாழ்ப்பாணம் கரவெட்டியில் ‎ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு தொற்று இருப்பதாக ‎உறுதி செய்யப்பட்டுள்ளது.

‎* நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 563 பேர் நேற்று ‎குணமடைந்த நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 7  ‎‎ ஆயிரத்து 186 ஆக அதிகரித்துள்ளது.

‎* கொழும்பில் மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டாம் ‎கொவிட்-19 அலையால் 2115 நோயாளர்கள் அடையாளம் ‎காணப்பட்டிருப்பதுடன், அங்கு கடந்த இரண்டு தினங்களில்; 5 பேர் ‎உயிரிழந்தனர்.

‎* பாடசாலைகளில் 50 சதவீத மாணவர்களை பாடசாலைகளுக்கு ‎வரவழைத்து நேரமாற்றம் இன்றி, சமுக இடைவெளி உள்ளிட்ட ‎சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி கல்வி செயற்பாடுகளை ‎நடத்துவது குறித்த யோசனை முன்வைக்கப்பட்ட போதும், இறுதி ‎தீர்மானம் எடுக்கப்படவில்லை. ‎

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »