இவ்வருடம் வெளியான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பெறுபேற்றின் படி கிண்ணியா வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட பாடசாலையொன்றில் கல்வி பயிலும் விசேட தேவையுடைய மாணவனொருவர் சாதனை படைத்துள்ளார்.
முஹம்மது சமீர் முஹம்மது உசாமா எனும் மாணவன் 158 புள்ளிகளை பெற்று தனக்கும் தனது பாடசாலைக்கும் பெறுமை சேர்த்துள்ளார்.
பாடசாலையின் அதிபர், ஆசிரியர்களின் சிறந்த வழிகாட்டுதல்களே குறித்த மாணவனின் பெறுபேற்றுக்கு முக்கிய காரணமாகவும் விளங்குகிறது.
சிறுவயதிலேயே தனது தாயை இழந்த குறித்த மாணவன், கல்வி கற்பதற்காக, மூன்று சக்கர நாற்காலியிலேயே தனது வீட்டிலிருந்து சுமார் 300 மீற்றர் பாடசாலைக்கு செல்வார் எனவும், இவரை அவரது வளர்ப்புத் தாயே பாடசாலைக்கு அழைத்துச் செல்வதாகவும் தெரியவந்துள்ளது.
தன்னால் நடக்க முடியாத விசேட தேவையினை கொண்டிந்தாலும், கல்வி கற்க ஊனமுற்றிருப்பதும் வறுமையுடன் இருப்பதுவும் தடையல்ல எனவும், எதிர்காலத்தில் சிறந்த வைத்தியனாக வருவதே எனது இலட்சியமாகும் எனவும் முஹம்மது உசாமா தெரிவித்துள்ளார்.