Our Feeds


Monday, November 16, 2020

www.shortnews.lk

சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 12 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

 



சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 12 சந்தேக நபர்களை மீண்டும் எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்று உத்தரவிட்டது.


குறித்த வழக்கு திங்கட்கிழமை (16) அன்று அம்பாறை மாவட்டம் கல்முனை நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் இரு வேறு சந்தர்ப்பங்களில் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்ட போது வீடியோ கன்பிரன்ஸ் (காணொளி) ஊடாக சந்தேக நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து குறித்த 12 சந்தேக நபர்களையும் மீண்டும் எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

குறித்த விசாரணையின் போது மேலதிக அறிக்கைகள் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்டு மீண்டும் சந்தேகநபர்கள் விசாரணைக்காக மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி ஒன்றில் வைத்து கடந்த வருடம் மேற்குறித்த 12 சந்தேக நபர்களும் கைதாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாதி சஹ்ரான் ஹாசீம் தலைமையில் பல்வேறு இடங்களில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்ததோடு அதனை தொடர்ந்து ஏப்ரல் 26 அன்று அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு தாக்குதல் சம்பவத்தின் பின்னர் குறித்த அமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நாட்டின் நாலாபுறமும் பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »