கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த இந்த 9 பேரின் உயிரிழப்புடன் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.
1. கொழும்பு 2 ஐ சேர்ந்த 57 வயதுடைய ஆண் - கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. - இவருக்கு நிமோனியாவும் இருந்துள்ளது.
2. வெள்ளம்பிட்டிய பகுதியை சேர்ந்த 65 வயதுடைய ஆண் - கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. - இவருக்கு அதிக இரத்த அழுத்தம் இருந்துள்ளது.
3. தெமடகொட பகுதியை சேர்ந்த 89 வயது ஆண் - கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. - இவருக்கு நிமோனியாவும் இருந்துள்ளது.
4. கொழும்பு 10 ஐ சேர்ந்த 49 வயது பெண் - வீட்டில் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. - கொரோனாவினால் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
5. கொழும்பு 10 ஐ சேர்ந்த 72 வயது ஆண் - வீட்டில் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. - கொரோனாவினால் இவருக்கு மாரடைப்பும் அதிக இரத்த அழுத்தமும் ஏற்பட்டுள்ளது.
6. கொழும்பு 13 ஐ சேர்ந்த 69 வயது பெண் - வீட்டில் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. - கொரோனாவினால் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
7. வெள்ளவத்தை பகுதியை சேர்ந்த 76 வயது ஆண் - கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொரோனா அடையாளம் காணப்பட்டு பின் IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்தார் - இவருக்கு நிமோனியாவும் ஏற்பட்டதுடன், வைரஸ் தொற்றும் ஏற்பட்டுள்ளது.
8. வெள்ளம்பிடிய பகுதியை சேர்ந்த 75 வயது பெண் - கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொரோனா அடையாளம் காணப்பட்டு பின் ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இவருக்கு நிமோனியா இருந்துள்ளது.
9. 76 வயதுடைய பெண் - தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொரோனா அடையாளம் காணப்பட்டு பின் IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்தார் - இவருக்கு இரத்தத்தில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.