இன்று - 05.11.2020 மாத்திரம் ஒரே நாளில் இலங்கையில் 5 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்கள்.
01. கொழும்பு - 02 - கொம்பணித்தெருவை சேர்ந்த 46 வயதுடைய ஆண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேலை நேற்று (04) உயிரிழந்தார். இவருக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
02. வெல்லம்பிடிய பகுதியை சேர்ந்த 68 வயதுடைய பெண் நேற்றைய தினம் (04) நெஞ்சுவலி காரணமாக கொழும்பு, பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேலை உயிரிழந்துள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்து.
03. கொழும்பு 12 - புதுக்கடை பகுதியை சேர்ந்த 58 வயதுடைய பெண் அவருடைய வீட்டில் வைத்து மரணித்த நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் கொரோனாவினால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
04. கொழும்பு 14 - கிரேன்பாஸ் பகுதியை சேர்ந்த 73 வயதுடைய பெண் அவருடைய வீட்டில் வைத்து மரணித்த நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் கொரோனாவினால் ஏற்பட்ட நுரையீரல் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
05. கொழும்பு 15 - மட்டக்குளிய பகுதியை சேர்ந்த 74 வயதுடைய ஆண் அவருடைய வீட்டில் வைத்து மரணித்த நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் கொரோனாவினால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.