மத மற்றும் திட்டமிடப்பட்ட திருமண நிகழ்வுகளை நடத்துவது தொடர்பில் அந்தந்த பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார அதிகாரி அல்லது பொது சுகாதார பரிசோதகருடன் கலந்துரையாடி அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்க செயலாளர் மகிந்த பாலசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
கடும் சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய குறைந்த தொகையினரை கொண்டு அந்த செயற்பாடுகளை முன்னெடுக்க கூடிய வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இசை நிகழ்ச்சி மற்றும் ஏனைய நிகழ்வுகளை அனுமதி வழங்கப்படாது எனவும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்க செயலாளர் மகிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் இணையம் ஊடாக ஒளடதங்களை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.