அக்குறனை, நீரல்ல பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக தனியார் வைத்தியசாலையில் நேற்று - 29.10.2020 மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு இன்று மீண்டும் அரசு சார்பில் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் வரும் வரையில் யாரும் பதற்றப்படத் தேவையில்லை என அக்குரணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாதுத்தீன் தெரிவித்துள்ளார்.
சற்று முன்னர் SHORTNEWS சார்பில் இது தொடர்பில் அவரிடம் தொடர்பு கொண்டு வினவிய போதே இதனை அவர் தெரிவித்தார்.