ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 6 பேர் 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள் அவ்வாறு வாக்களித்தமையானது அவர்களுடைய சுயநலத்துக்காகவா அல்லது முஸ்லிம் மக்களின் நலனுக்காகவா என யோசித்துபார்க்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் தெரிவித்தார்.
கொழும்பு எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்நாட்டில் பள்ளிகளை உடைப்பதற்கும் முஸ்லிம் சமூகத்து எதிராகவும் அவர்களுடைய வியாபாரங்களை இல்லாமல் செய்து, முஸ்லிம்களை மனநோயாளிகளாக மாற்றிய அரசாங்கத்தோடு முஸ்லிம் ஒருவர் எவ்வாறு சேர்ந்து கொண்டார் என்பதில் எங்களுக்கு சந்தேகம் உண்டு.
பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜக்சவின் பக்கம் செல்வதால், அது முஸ்லிம் சமூகம் சென்றதாக அர்த்தமில்லை. எனவே முஸ்லிம் சமூகம் இவர்களுக்கு அடுத்த தேர்தலில் சரியான பதிலை கொடுக்க வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த முஸலிம் பிரதிநிதிகள் 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள் அவ்வாறு வாக்களித்தமையானது அவர்களுடைய சுயநலத்துக்காகவா அல்லது முஸ்லிம் மக்களின் நலனுக்காகவா என யோசித்து பார்க்க வேண்டும்
முஸ்லிம்களுடைய பிரச்சினைகளை விற்று, முஸ்லிம்களால் பாராளுமன்றத்துக்கு வந்து தன்னுடை சுயநலத்துக்காக முஸ்லிம் மக்களை காட்டி கொடுத்து ராஜபக்சவுடன் செல்வது யாராக இருந்தாலும் அவர்களுடைய எதிர்காலத்தை முஸ்லிம் மக்களே தீர்மானிக்க வேண்டும்.
எதிர் கட்சியிலிருந்தும் முஸ்லிம்களுக்காகவும் பெரும்பான்மை சமூகத்துடன் இணைந்து வாழக்கூடிய சூழலை முஸ்லிம்களுக்கு உருவாக்கவும் உண்மையாக குரல் கொடுக்கின்ற பணிகளை நாம் செய்வோம் எனத் தெரிவித்தார்.