அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி க்கள் மூவர் நடத்திய பேச்சுக்கள் வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மு.க அரசுடன் இணைய வேண்டும் என்ற முயற்சிகளை ஆரம்பம் முதலே இம்மூன்று எம்.பி க்களும் மேற்கொண்டு வந்த போதிலும் இறுதிக் கட்டத்தில் தலைவர் ஹக்கீம் பின்வாங்கியுள்ளார். அதன் பிரதிபளிப்பே 20வது திருத்தத்திற்கு எதிராக மு.கா 2 வழக்குகளை நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளமை சுட்டிக்காட்டப் படுகின்றது.
அந்த வகையிலேயே ஹக்கீமுடன் முரண்பட்ட 3 எம்.பி க்களையும் அரசுடன் இணைத்துக் கொள்வதில் அரசின் உயர்மட்டம் காய்களை நகர்த்தி வெற்றி கண்டுள்ளது. இந்த 3 பேரில் 2 பேர் பாராளுமன்றத்திற்கு பழையவர்கள் ஒருவர் புதியவராவார்.
இம்மூவரும் முதல் கட்டமாக 20க்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளனர். இது தொடர்பில் மூன்று எம்.பி க்களின் கருத்துக்களை அறிய முற்பட்ட போதும் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.