இலங்கையில் 20வது அரசியலமைப்பினை தற்போதுள்ள ராஜபக்ஷ அரசு கொண்ட வந்தபோது அதற்கான வலுவான எதிர்ப்புக்கள் எழத்தொடங்கியதன் பின் 3:2 பெரும்பான்மையுடன் கடந்த 22ஆம் பாராளுமன்றில் 156 வாக்குகளினால் “20” நிறைவேற்றப்பட்டது.இவ் அரசியலமைப்பு நிறைவேற்றப்படுவதற்கு முஸ்லிம், தமிழ் என்ற சிறுபான்மையே இந்த ஆட்சியாளர்களுக்கு உதவியது. அதற்கமைய 3 பிரதான வாக்களிப்பை பாராளுமன்றம் நடத்தியது அதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிலைப்பாட்டில், முஷாரப் எம்பியின் வாக்களிப்பில் தெளிவை காணாது சிலர் அவரை விமர்சித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. அதில்;
✔️ 01 ஆம் , வாக்களிப்பு (20வது அரசியலமைப்பு)
148 ஆசனங்களை மாத்திரம் வைத்திருந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு மேலதிக 08 வாக்குகளை பிரதான எதிர்க்கட்சியின் முஸ்லிம், தமிழ் உறுப்பினர்கள் வழங்கியதால் அவர்கள் வெற்றி கண்டார்கள்.
குறித்த எதிர்க்கட்சியை சார்ந்த 08 பேரும் ஆதரவு வழங்கியிருக்காத பட்சத்தில் இவ்வரசின் புதிய 20வது அரசியலமை தோல்வியை கண்டிருக்கும், அத்தோல்வியானது இவ்வரசின் பெரும் தோல்வியாகவே கணிக்கப்பட்டிருக்கும். ஆனால் அத்தோல்வி 08 பேரால் முறியடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த முதலாம் வாக்களிப்பில் குறைவான வாக்குகள் எடுத்தாலும் அரசு தோல்வியை காணது, இறுதி வாக்களிப்பே 20இன் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும்.
❌ யார் (?) அந்த 08 பேரும் ;
01 . டயான கமகே (ஐக்கிய மக்கள் சக்தி)
02. அரவிந் குமார் (தமிழ் முற்போக்கு கூட்டணி)
03. நசீர் அஹமட் (முஸ்லிம் காங்கிரஸ்)
04. ஹரீஸ் (முஸ்லிம் காங்கிரஸ்)
05. பைஷல் காசீம் (முஸ்லிம் காங்கிரஸ்)
06. இஷாக் ரஹ்மான் (மக்கள் காங்கிரஸ்)
07. அலி சப்ரி ரஹீம் (மக்கள் காங்கிரஸ்)
08. தெளபீக் (முஸ்லிம் காங்கிரஸ்)
மேல் உள்ள 08 பேர் மாத்திரமே 20வது அரசியலமைப்பின் 01ஆம் 2ஆம் மற்றும் 03 வாக்களிப்புக்கு வாக்களித்தனர் இவர் மூலமே அரசு 20இல் வெற்றியை கண்டது.
✔️ 02ஆம் வாசிப்பு (இரட்டை பிரஜாவுரிமை)
அதன் பின் , அவ்வரசியல் அமைப்பின் 17வது சரத்தான “இரட்டா பிரஜாவுரிமை கொண்டவரை பாராளுமன்றிற்குள் உள்வாங்கப்படுவர்” என்ற சரத்தில் ஆளும், எதிர்க்கட்சிக்குள் அதிகம் சர்ச்சை எழும்பிய காரணத்தால் 02ஆம் வாக்கெடுப்பாக “17ஆம் சரத்திற்கு” மாத்திரம் தனி வாக்கெடுப்பை கோரியபோது அது 157 வாக்குகளுடன் நிறைவேறியது.
குறித்த “17ஆம் சரத்தான , இரட்டா பிரஜாவுரிமைக்கு மாத்திரம் “ அகில இலங்கை மக்கள் கங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் வாக்களித்தார்.
தனிப்பட்ட ரீதியில் பசில் ராஜபக்ஷவுக்காகத்தான் இரட்டா பிரஜாவுரிமை கொண்டுவரப்பட போவதாகவும், அதற்கு எதிராக சில இனவாதிகள் எதிர்ப்பை வெளிக்காட்டுவதால் இனவாதிகளுக்கு சாட்டையடியாக அவ்வாக்கை முஷாரப் வழங்கி இருந்தார் .
ஆனால், பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்குள் நுழைவதன் மூலம் சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான இனவாதம் குறைக்கப்படும் என்பதுடன், சிறுபான்மை சமூகத்திற்கான உதவிகள் மேலோங்கப்படும் என்ற நம்பிக்கை உண்டு . அதற்காகவும் இனவாதிகளுக்கு சாட்டையடியாகவும் இருக்குமென்றே முஷாரப் இந்த வாக்கை இட்டார்.
ஆனால் 17ஆம் சரத்திற்கு மாத்திரம் வாக்களிப்பு கோரப்படும் என எந்த உறுப்பினர்களும் ஏலவே எதிர்பார்க்கவும் இல்லை.
இரட்டா பிரஜாவுரிமையை 19 அரசியலமைப்பில் முன்னைய நல்லாட்சி அரசினால் அரசியல் வழிவாங்களாகவே நீக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
✔️ 03 ஆம் வாக்கெடுப்பு;
20 மீதான- 03 ஆவது வாக்கெடுப்பானது , 20 மீதான சிறு திருத்தங்களுடனான ஒப்புதலின் பின் மீண்டும் இறுதி வக்கெடுப்பாக நடைபெற்ற போதும் முஷாரப் எம்பி 20க்கு எதிராகவே வாக்களித்தார் தவிர, 20க்கு ஆதரவாக முஷாரப் வாக்களிக்கவுமில்லை, அரசுக்கு ஆதரவு வழங்கவுமில்லை.
20ஆவது திருத்தத்தின் 57 சரத்துக்கள் மீதான விவாதங்கள் நடைபெற்ற போது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சில சரத்துக்களுக்கு நடுநிலமை எனவும், ஆதரவு, எதிர்ப்பு என்று சரத்துக்கள் ரீதியான தனிப்பட்ட விவாதங்கள் இடம்பெற்ற போது ஐக்கிய மக்கள் சக்தியே சில விடயங்களை ஒப்புக்கொண்ட போதும் முஷாரப் இரட்டை பிரஜாவுரிமைக்கு ஆதரவளிப்பதில் எந்த தவறுமில்லை.
ஆக எதிர்க்கட்சி அணி சொல்லுவதற்கெல்லாம் ஆமா சாமி போடுவதறற்கு மக்கள் காங்கிரஸ் கட்சியோ, அதன் தலைமையோ அல்லது முஷாரபோ தயார் நிலையில் இல்லை என்பதை மிக தெளிவாக முஷாரப் எடுத்துக்காட்டியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்திக்கோ அல்லது பொதுஜன பெரமுன கட்சிக்கோ “ஆமா சாமி” போடும் நிலையில் மக்கள் காங்கிரஸ் இல்லை என்பதை மிகத்தெளிவாக முஷாரப் 20ற்கு பின் நடைபெற்ற ஐக்கிய மக்க்ள் சக்தியின் குழுக்கூட்டத்தில் கூறியுள்ளார். “உங்களுக்கு ஆமா சாமி போடும் தேவை எனக்கு இல்லையென்பதையும், உங்களுக்கு பிடிக்காததை எதிர்க்கும் தேவை எம் கட்சிக்கும் இல்லை” என்பதையும் முஷாரப் தெரிவித்து அவர்களின் குழுக்கூட்டத்தை எதிர்த்து வெளியேறியிருந்தார்.
20க்கு எதிரான நிலைப்பாட்டிலையே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. அதன் அடிப்படையில் தான் அக்கட்சியின் தலைவர் சிறைச்சாலையில் இருந்தும் கூட அரசுக்கு எதிராகவே வாக்களித்தார்கள் . அவரின் கொள்கையை திடமாக செயற்படுத்தியுள்ளார் ஏனைய மக்கள் காங்கிரஸ் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தாலும் அவர்களின் நிலைப்பாடு கட்சியின் எதிர்கால நிலை கருதி, தலைவர் மீதான போலிக்குற்றச்சாட்டுக்கள் நீங்க வேண்டும். அத்துடன் எங்கள் வாக்களிப்பில் கட்சியினுடான சமூக நன்மை உள்ளது என அவர்களின் நிலைப்பாட்டை என கூறியிருக்கின்றார்கள் ஆனால் அவர்கள் தொடர்ந்தும் கட்சியுடன் எந்த பிளவும்
இல்லாமல் இருப்பதாக தெரிய முடிகிறது!
ஆக, விளக்கம் இல்லாமல் அல்லது தெளிவு இல்லாமல் முகநூல்களில் கொப்பி, பேஸ்ட் செய்வது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதிலிருந்து தவிர்ந்துகொள்ளுங்கள்.
முஸ்லிம் சமூகத்தில் பலர் அடிக்கடி சீசனுக்கு ஏற்றப்போல் கதைகளை மாற்றிக்கொள்ளாமலும். சமூக சார் விடயங்களில் தெளிவுடன் இருந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
ரிஷாத் பதியுதீன் என்ற அரசியல்வாதி சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான துன்பங்கள் வந்த போதும், முஸ்லிம் சமூகம் இனவாதிகளின் துன்பங்கள் வந்த போது மக்களுக்காக செயற்பட்ட அவரை இன்று வாய் கூசாமல் பேசுவதையும் நாம் பார்க்க கூடியதாக இருக்கின்றது. பெரும்பான்மை இனவாதிகளை தைரியமாக எதிர்த்த ஒரே தலைவர் ரிஷாத் பதியுதீன் அதற்காகவே இன்று சிறையில் இருந்து பழிவாங்கப்பட்டுக்கொண்டிருக்கார் என்பதை முஸ்லிம் சமூகம் மறந்துவிடக்கூடாது.
“20”ற்கு ஆதரவளித்த சிலர் , பணத்தை புரட்டவும்- அமைச்சுக்களை பெறவும் சமூகத்தை விற்ற
சம்பவங்கள் பதிவாகினாலும், அவர்களின் நடிப்பால் அவர்களை விமர்சிக்க முடியாமல் இந்த “பேஸ்புக் எழுத்தாளர்கள்” இருக்கின்றார்கள் யார் நடிகன் யாரு யதார்த்தவாதி என்பதை தெரியாமல் இச்சமூகம் இன்னும் இருந்தால் எம் சமூகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியே, குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 4 உறுப்பினர்கள் 20க்கு ஆதரவளித்த பின் , ஊடகங்களில் ஒன்றினையும், கட்சிக்குள் ஒன்றினையும் விதைத்துக்கொண்டிருக்கின்றார்கள் அதை சற்று அவதானியுங்கள்.
எம் சமூகத்தினர் தெளிவான நிலைப்பாட்டில் இருந்துகொள்ளுங்கள். புரிந்துணர்வுடன் உங்கள் எழுத்துக்களை எழுதுங்கள் தோழர்களே!
தொடரும்..
ஒரு தொண்டனாய்
சப்னி அஹமட்
அட்டாளைச்சேனை