சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள MCC ஒப்பந்தம் தொடர்பிலான தீர்மானம் சுதந்திர இலங்கையின் கையில் உள்ளதாக அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இருநாடுகளுக்கும் இடையிலான உறவு இலங்கை எவ்வித தீர்மானம் எடுத்தாலும் மாறாது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னனி தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.