கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து பாணந்துறை வைத்தியசாலையின் ICU மூடப்பட்டுள்ளது.
நேற்று (09) மேற்கொள்ளபட்ட PCR பரிசோதனையின் மூலம் குறித்த இளம் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
வைத்தியசாலையின் குறித்த பிரிவில் கடமையாற்றிய வைத்தியர்கள் மற்றும் செவிலியர்கள் என 15 பேர் வரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.