இஸ்லாத்தின் இறுதி இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை நிந்திக்கும் வகையில் தொடர்ந்து செயல்படும் பிரான்ஸ் அரசை கடுமையாக விமர்சனம் செய்து கண்டித்துள்ள பிரபல இஸ்லாமிய ஆங்கில மொழி பிரச்சாரகரான Dr ஸாகீர் நாயக் அவர்கள் பிரான்ஸ் நாட்டின் முக்கிய தயாரிப்புகளின் பட்டியலை வெளியிட்டு அவற்றை முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நிந்திப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக இழப்பை உண்டாக்குவதின் மூலம் முஸ்லிம்களின் பலத்தை காட்டுவதற்கான அழைப்பாக இதனை அரசியல் நோக்கர்கள் கருதுகின்றார்கள்.