குருநாகல் வைத்தியசாலையில் கடமையாற்றிய மருத்துவர் ஷாபி ஷிஹாப்தீன் தமக்கு தெரியப்படுத்தாமலேயே கருத்தடை செய்ததாக பொலிசில் புகார் வழங்கிய பல பெண்களுக்கு குழந்தை கிடைத்துள்ளது.
இந்த பொய்யான கருத்தடை குற்றச்சாட்டு கடந்த காலங்களில் பெரும் சர்சையை இலங்கையில் ஏற்படுத்தியிருந்தது.
தமக்கு ஷாபி கருத்தடை செய்ததாக கூறி சுமார் 800 பெண்கள் பொலிசில் புகார் வழங்கியிருந்தார்கள்.
இவர்களில் சுமார் 268 பேரிடம் பொலிசார் விசாரனை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர். விசாரனை நடத்தப்பட்ட 268 பேரில் 10 பேருக்கு தற்போது குழந்தை கிடைத்துள்ளதாக அத் தாய்மார்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பில் மேலதிக விசாரனைகள் அவசியமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் 650 தாய்மார்கள் இவ்விவகாரம் தொடர்பில் மேலதிக விசாரனைகளுக்க உட்படுத்தப்படவுள்ளனர். இவர்களிலும் பலருக்கு குழந்தைகள் கிடைத்துள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.