கொவிட் 19 - கொரோனா உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் தொற்று நோயாகும். இலங்கையில் மாத்திரம் கட்டுப்படுத்துவதினால் இந்த வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப் படுத்திவிட முடியாது. என்று தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள நிலைமைகளில் கொரோனா வைரஸ் தொற்று நோயுடன் நாம் வாழ்வதற்கு பழகிக் கொள்ள வேண்டும். கொரோனா என்பது உலகத் தொற்றாகும் இது முடிவுக்கு கொண்டுவர முடியாத நோயாக மாறி விட்டது.