Our Feeds


Tuesday, October 6, 2020

www.shortnews.lk

கொரோனா தொற்றுகளின் பெரும்பாலானவை அறிகுறியற்றவை - அதுவே நாம் சந்தித்த முக்கிய சவால் - brandix அறிக்கை

 



நிகழ்நிலைப்படுத்தல் - மினுவங்கொடையில் பிரண்டிக்ஸ் தொழிற்சாலையில் COVID-19 தொற்று கண்டறிதல் பற்றி


ஒக்டோபர் 6, 2020 : மினுவங்கொடையில் உள்ள எங்கள் தொழிற்சாலையில் COVID-19 தொற்றுக்கு உள்ளான ஊழியரை ஆரம்பத்தில் கண்டறிந்ததை தொடர்ந்து, இந்த நெருக்கடியான காலகட்டத்தில் பொது மக்களுக்கும் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களுக்கும், எங்களிடம் உள்ள புது விபரங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். மினுவங்கொடை தொழிற்சாலையில் மொத்தம் 1,394 பிரண்டிக்ஸ் ஊழியர்கள் நேற்று, அக்டோபர் 5, 2020 திகதி அன்று COVID-19 பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

இதன் போது அதிக அளவு பரிசோதனைகள் இடம்பெற்றதால் ஊழியர்களுக்கு சில நேரம் காத்திருப்பதற்கு நேர்ந்தது. இதுவரை, 567 ஊழியர்களுக்கு நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளின் பெரும்பாலானவை அறிகுறியற்றவை அல்லது COVID-19 உடன் தொடர்புடைய அறிகுறிகள் காட்சியளிக்காதவை என்பதே, இந்த செயல்முறை முழுவதும் நாம் அனுபவித்த முக்கிய சவால்களில் ஒன்றாக அமைந்தது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய தொடர்புகளை தனிமைப்படுத்தல் மையங்களுக்கு இடமாற்றும் போது பாதிக்கப்பட்டவர்களின் வசதியை கவனிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். மேலும், அவர்கள் தனிமைப்படுத்தல் மையங்களில் தங்கியிருக்கும் போது அவர்களுக்கு வசதியாக இருக்க உதவும் அனைத்து நடவடிக்கையையும் நாங்கள் எடுத்து வருகிறோம்.

எங்கள் ஊழியர்கள், சமூகங்கள் மற்றும் நமது தேசத்தின் நல்வாழ்வு எங்கள் முன்னுரிமையாக உள்ளது. இந்த சூழ்நிலையில் ஜனாதிபதி செயலகம், பாதுகாப்பு அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை இராணுவம் எங்களுக்கு அளித்த ஆதரவையும் ஆலோசனையையும் நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »