முகமது நபி அவர்கள்...
பொது ஆண்டு 570ல்-இன்றைய நாளில் இன்றைய சவூதி அரேபியாவில் மெக்கா நகரில் பிறந்ததாக கணிக்கப்படுகிறது. 64 வயது வரை (இறப்பு 8 சூன் பொ.ஆ.632 கணிப்பு) இவ்வுலக வாழ்வை வாழ்ந்த அவர்கள்- இதுவரை உலகில் வாழ்ந்த பெருமக்களில் முதன்மையாளராக போற்றப்படுகிறார்..!
சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்து தம் சிறிய தந்தை அபூ தாலிபிடம் வளர்ந்து வந்த அவர் - தனது 40ஆவது வயதில் நபித்துவம் பெற்று .. அதன் மூலமாக கிடைத்த இறைத்தூதுகள் வழியே... அதன்பின் அவர் வாழ்ந்த மிகக் குறுகிய காலமாகிய 23 ஆண்டுகளிலேயே வியத்தகு மாற்றங்களை நிகழ்த்திக் காட்டினார்.
அவர் வாழ்ந்த காலத்தில் அரேபியா மற்றும் உலகமெங்கும்.. பல்வேறு இனக்குழுக்கள் இருந்தன.
கருப்பின அடிமைகளும், பெண்ணிய கொடுமைகளும், கடவுள்களை மூலதனமாக்கி மக்களை ஏமாற்றுவதும் அரேபிய மண்ணில் உச்சத்தில் இருந்தது…!
நபிகள் அவர்களின் இஸ்லாம் மார்க்கம் இதை மூர்க்கமாக எதிர்த்தது..!
அவரை பின் தொடர்பவர்கள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும் .. எங்கும் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளாமல்...இறையச்சத்துடன் வாழ்ந்தவர்... இன்று வரையும் இஸ்லாம் மார்க்கம் அவரை இறைத் தூதராக முன்னிருத்துகிறதே தவிர .. கடவுளாக சித்தரிப்பதில்லை…!
இது உலகில் வேறு எங்கும் காணாதது.
இன்று பள்ளிவாசலில் தொழுகைக்கு அழைக்கும் அழைப்பை... முதன்முதலில் அழைத்தது ஓர் கருப்பினத் தோழர் பிலால் அவர்கள்தான்..! அடிமைத்தனத்திலிருந்து அவரை விடுவித்து...அந்த உயரிய மரியாதையை, அன்பைத் தந்தவர் நபிகள் அவர்கள்..!
தோழர் என்று தனது சக நட்புகளை அழைத்த அவரைப்பற்றி படிக்கும் போது- பேரண்பும் பெருமதிப்பும் கொள்கிறேன்..…!
இன்றைய அரசியல் வாதிகளின் விமர்சனங்களையும்... நிகழ்கால தனிமனித செயல்பாடுகளையும் கொண்டும் இஸ்லாத்தை நான் புரிந்து கொள்ளவில்லை.. எனது அறிவு வழியே வரலாற்றில் பயணப்பட்டு ...அறிந்து கொள்கிறேன்..
அப்படிப்பட்ட வரலாற்றுத் தேடலில்...
நபிகள் என்ற மானுடநேசர் மேல் பேரன்பும்..பெருமதிப்பும் கொள்கிறேன்..!💕