Our Feeds


Monday, October 19, 2020

www.shortnews.lk

முஸ்லிம்களின் பாபர் பள்ளி இருந்த இடத்தில் கட்டப்படும் இராமர் கோவிலுக்கு இலங்கையிலிருந்தும் கல்லொன்று அனுப்பப்படுகிறது ?

 



அயோத்தியில் நிர்மாணிக்கப்படும் ஶ்ரீ ராமர் கோவிலுக்கான அடிக்கல் ஒன்று இலங்கையிலிருந்து பூஜிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

இந்த கல் சீதாஎலிய சீதையம்மன் கோவிலின் புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் கண்டெடுக்கப்பட்டு இதுவரை பூஜிக்கப்பட்ட ஒன்றாகும்.

இராமாயணத்தில் போற்றப்படும் இலங்கையின் கோவிலாகவே நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயம் வர்ணிக்கப்படுகிறது.

அந்த ஆலயம் புனர்நிமாணம் செய்யப்படும் போது குறித்த கல் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன் பின்பு இதுவரை காலமும் அந்த கல் பூஜிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அயோத்தியில் கட்டப்படும் ஶ்ரீ இராமபிராணின் கோயிலுக்கான அடிக்கற்களில் ஒன்றாக இதனை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நுவரெலியா சீதாஎலிய சீதையம்மன் மற்றும் ஹாவாஹெலிய ஶ்ரீ முத்துமாரிஅம்மன் ஆலயம் ஆகியவற்றில் வைத்து விசேட பூஜைகள் செய்யப்பட்டன.

இந்த பூஜைகளில் பாராளுமன்ற உறுப்பினர் V. இராதாகிருஸ்ணன் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இராமயணத்தோடு சம்பந்தப்பட்ட அந்தக் காலத்திலே நாங்கள் சீதையம்மன் ஆலயத்திலே உபயோகித்த முக்கியமான ஒரு கல்லை இப்பொழுது அயோத்திக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம். இந்த புனித கல்லானது கடந்த காலங்களில் சீதாஎலிய கோயில் அமைக்கப்படும் போது எடுக்கப்பட்ட ஒரு கல்லாகும். இந்த கல் சீதாஎலிய சிதையம்மன் ஆலயத்திலும் ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் பூஜையிலே வைக்கப்பட்டு பரிபாலன சபையின் மூலமாக கொழும்புக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் V. இராதாகிருஸ்னண் இதன்போது தெரிவித்தார்.

இதே வேலை தற்போது இராமர் கோவில் கட்டுவதற்கு தயார் படுத்தப்பட்டுள்ள இடம் முஸ்லிம்களின் பாபர் பள்ளிவாயல் இருந்த இடமாகும். பாபர் என்ற இஸ்லாமிய மன்னர் இராமர் கோவிலை உடைத்துத் தான் பாபர் கோவில் கட்டினார் எனக் கூறி பாபர் பள்ளிவாயல் தற்போதைய ஆளும் ப.ஜ.க அரசின் முக்கியஸ்தர்களான முரளி மனோகர் ஜோஷி, அத்வானி உள்ளிட்டவர்களின் தலைமையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான அப்பாவி இந்து மக்களை தூண்டி ரத யாத்திரை என்ற பெயரில் குறித்த பள்ளியை உடைத்து அபகரித்தார்கள். 

பின் நாட்களில் நீதி மன்றம் மூலம் அநியாயத் தீர்பொன்றை பெற்று பள்ளி இருந்த இடத்தை முழுவதும் அபகரித்துக் கொண்டார்கள் என்பதே வரலாறாகும்.

இராமாயண வரலாறு பிரகாரமே இராமன் தற்போதைய நேபாளத்திலேயே பிறந்திருப்பதாக இராமாயணம் கூறுவதுடன் அண்மையில் நேபாள பிரதமரும் இதனை வலியுறத்தியிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »