Our Feeds


Thursday, October 29, 2020

www.shortnews.lk

ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைது செய்வதற்கு சிவில் பாதுகாப்பு ‎அதிகாரிகள்...

 

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைது செய்வதற்கு சிவில் ‎பாதுகாப்பு அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி ‎காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். 

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபர் கைது - Arrested- threaten public-  tirunelveli- FIR | Thandoratimes.com |

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்ற போது வெளியில் உள்ளவர்களுடன் ‎தொடர்புபட்டு செயற்பட முடியாது.

அத்துடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளுக்கு வெளியில் இருந்து ‎செல்பவர்கள் குற்றவாளிகளாகவே கருதப்படுவார்கள்.

மேலும் வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்களின் முன்பு சமூக ‎இடைவெளியை பேணாதவர்களும் கைது செய்யப்படுவர்.

அத்துடன் இந்த வார இறுதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படாத ‎பகுதியிலுள்ள மக்களும் அவதானமாக செயற்பட வேண்டும் .

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படாத பகுதிகளில் உள்ளவர்களும் சுற்றுலா ‎பயணங்கள் செல்வதை தவிர்த்து கொள்ள வேண்டும் எனவும் காவல்துறை ‎பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். ‎

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »