Our Feeds


Wednesday, October 28, 2020

www.shortnews.lk

கொரோனா தொற்றுதியான பலர் பொதுப்போக்குவரத்து சேவைகளில் ‎....

 

கொரோனா தொற்றுதியான பலர் பொதுப்போக்குவரத்து சேவைகளில் ‎....


பேலியகொடை மீன் சந்தை மூலம் கொரோனா தொற்றுதியான பலர் ‎பொதுப்போக்குவரத்து சேவைகளில் பயணித்துள்ளதாக காவல்துறை ஊடகப் ‎பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில், தங்களின் பேருந்துகளின் இலக்கங்கள் நன்கு ‎தெரியக்கூடிய வகையில் காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ‎அரச மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் அவர் கோரிக்கை ‎விடுத்துள்ளார்.

பேலியகொடை தொற்றின் பின்னர், பலர் பேருந்துகளில் பயணித்துள்ளமை ‎கண்டறியப்பட்டுள்ளது.

எனினும், தாங்கள் பயணித்த பேருந்துகள் எவை என்பதை ‎அடையாளப்படுத்துவதற்காக அதன் இலக்கங்களை அவர்களினால் ‎நினைவுபடுத்திக் கூறமுடியாத நிலைமை உள்ளது.

எனவேதான், அரச மற்றும் தனியார் பேருந்து துறையினரிடம் இந்தக் ‎கோரிக்கையை விடுப்பதாக காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார்.

இதேநேரம், பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள், தாங்கள் பயணித்த ‎பேருந்துகளின் இலக்கங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

குறித்த பேருந்துகளில், கொவிட்-19 நோயாளர் ஒருவர் பயணித்திருந்தால், அந்தப் ‎பேருந்தில் பயணித்த ஏனையவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு ‎அறிவித்தல்களை வழங்க தங்களுக்கு இலகுவானதாக இருக்கும் என்றும் ‎காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார். ‎

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »