மாத்தரை டெகோ மொபைல் நிறுவன உரிமையாளர் தம்பி அக்ரம் நிஸார் நல்லிணக்கத்திற்கு சிறந்த முன்னுதாரணம். அவரிடம் சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்ற பேதமில்லை. அனைவரையும் சமனாக மதிப்பவர் அவர். அனைவருக்கும் உதவி செய்பவர் அவர்.
அவருடைய பகுதியில் தொழில் செய்து வரும் ஜயரத்ன மேசன் பாஸ் அண்மையில் திடீரென உயிரிழந்தார்.
அவருடைய சடலம் மாத்தரை பெரிய வைத்தியசாலை சவச் சாலையில் வைக்கப்பட்டிருந்தது.
இரண்டு நாட்கள் கடந்தும் சடலத்தை பொறுப்பெடுக்க எவறும் செல்லவில்லை. ஜயரத்ன பாஸின் குடும்பத்தினருக்கு இறுதிக் கிரியைகளை நடத்துமளவுக்கு பொருளாதார வசதியின்மையே இதற்காக காரணம்.
இந்த விபரங்களை அறிந்த தம்பி அக்ரம் தனது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தை சேர்ந்தவர்களை ஒன்றிணைத்துக் கொண்டு ஜயரத்னவின் இறுதிக் கிரியைகளை செய்வதற்கு முன்வந்தார்.
இதற்கு மாத்தரை மேயர் தனது முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கினார். பௌத்த தேரர்கள் இறுதிக் கிரியை நிகழ்வுகளில் பங்கு கொண்டனர்.
இனந்தெரியாத சடலம் என மண்ணுக்குள் செல்லப்படவிருந்த ஜயரத்ன பாஸின் சடலத்தை குடும்பம் சகிதம் அடக்கம் செய்வதற்கு அவருக்கு எவ்வித உறவுமற்ற அக்ரம் முன்வந்தமை பெரும் மனிதாபிமான செயல் என அப்பகுதி பெரும்பான்மை மக்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.