நீர்கொழும்பு பழைய சிலாப வீதியில் ஆவே மரியா மாவத்தையில் அமைந்துள்ள தனியார் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து குறித்த வைத்தியசாலை மூடப்பட்டு அங்கிருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினம் நீர்கொழும்பு சென் ஜோசப் வீதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியின் மகன் நீர்கொழும்பில உள்ள பிரபல பீட்சா உணவகம் ஒன்றில் பணியாற்றுவதால் குறித்த பீட்சா உணவகம் மூடப்பட்டு அங்கு பணியாற்றிய அனைவரும் தனிமைப்படுத்த பட்டுள்ளனர்.
இதுவரையில் நீர்கொழும்பில் மொத்தம் 6 கொரோன நோயாளிகள் அடையாளம் காணபட்டுள்ளனர்