மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதார உயர் தரப் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் (Z Score)ஒக்டோபர் 26 திங்கட்கிழமை வெளியிடப்படவுள்ளது.
அதன்படி 2019 உயர் தரப் பரீட்சை வெட்டுப்புள்ளியானது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்படும்.
கொரோனா நெருக்கடி காரணமாகவே இந்த வெட்டுப் புள்ளிகளை வெளியடுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
மொத்தம் 41,500 பரீட்சார்த்திகள் பல்கலைக்கழகங்களில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.