இணையத்தளத்தை பாவித்து சிறிய பிள்ளைகள் கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்க அனுமதிப்பதன் மூலம் அவர்களை இலக்கு வைத்து சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட கூடிய அவதானம் உள்ளதாக இலங்கை தொலைத்தொடர்புகள் தொழிநுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் தொலைத்தொடர்புகள் தொழிநுட்ப பிரிவின் தலைவர் ரஜிவீ யசிறு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
கல்வி நடவடிக்கைகள் யாவும் மறுபடியும் Zoom, WhatsApp, Microsoft Teams ஆகிய இணையவழி தொழிநுட்பங்களை பயன்படுத்தி முன்னெடுக்கப்படுகின்றன.
இப்படி சிறு பிள்ளைகள் கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்க அனுமதிப்பதன் மூலம் அவர்களை இலக்கு வைத்து சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட கூடிய அபாயம் உள்ளதாக இலங்கை தொலைத்தொடர்புகள் தொழினுட்ப சங்கம் அடையாளம் கண்டுள்ளது.
பெற்றோர்கள் சிறு பிள்ளைகளை இவ்வாறு இணையத்தின் மூலம் கல்விக் கற்க அனுமதிப்பதன் ஊடாக அவர்கள் தேவையற்ற இணைய பக்கங்களுக்குள் நுழையும் நிலைமை உள்ளது.
பெற்றோருக்கு இணையம் சம்பந்தமான அறிவு குறைவாக உள்ளதாலும், பிள்ளைகளை இணையவழி கற்றலுக்கு அதிகமாக ஈடுப்படுத்துவதன் ஊடாகவும் சைபர் குற்றங்களில் ஈடுபட சிறுவர்கள் அதிகமாக ஊக்குவிக்கப்படுகின்றனர்.
ஆகவே பிள்ளைகள் இணைய வழி கற்றலில் ஈடுப்படும் போது பெற்றோர்கள் கூடிய அவதானத்துடன் செயயற்பட வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்புகள் தொழினுட்ப சங்கம் கேட்டுக் கொள்கின்றது.