20 ஆவது திருத்தத்திற்கு ரிசாத் பதியுதீனின் ஒத்துழைப்பைப்பெற எந்தத் தேவையும் அரசுக்கு கிடையாது. இது தொடர்பில் பொய்யான வதந்திகள் பரப்பப்படுவதாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.
இந்த நோக்கிலே அவரின் சகோதரர் விடுதலை செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியிடப்படுகிறது. ஆனால் சம்பந்தமில்லாத விடயங்களை முடிச்சுப் போட்டு அரசு மீது சேறு பூசப்படுகிறது. ரிசாத் பதியுதீனை அரச தரப்பிற்கு எடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவரை அரசுடன் இணைக்க எந்த தேவையும் கிடையாது என்றும் அவர் கூறினார்.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் என்ற வகையில் இது தொடர்பில் பொறுப்புடனே கூறுகின்றேன். 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவு பெற ரிசாதுடன் எந்த முன்னெடுப்பும் எடுக்கப்படவில்லை என்றார்.
இது தொடர்பில் நேற்று நடைபெற்ற பொதுஜன பெரமுன செயலாளர் சாகர காரியவசம் எம்.பி, ஜனாதிபதியோ பிரதமரோ ராஜபக்ஷ குடும்பத்தினரோ ரிசாத் பதியுதீனின் விடுதலை தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசாங்கத்துடன் இணைக்க எந்த உடன்பாடும் எடுக்கப்படவில்லை.
இது தொடர்பில் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. பொய்யான வதந்தியே பரப்படுகிறது என்றார்.