கொழும்பு மாநகர சபையின் பொது உதவிப் பிரிவின் சிரேஷ்ட உதவி முகாமையாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அதன்படி, பொது சுகாதார பிரிவின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் தாய் மற்றும் குழந்தைகள் நல பிரிவுகளையும் மூடுவதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.
இதன்கு மேலதிகமாக கொழும்பு மாநகர சபைக்குள் வெளியாட்கள் நுழைவதை மட்டுப்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.