Our Feeds


Friday, October 30, 2020

www.shortnews.lk

மேல்மாகாண அரச நிறுவனங்களுக்கு ஜனாதிபதி ‎ஊடகப்பிரிவின் அறிவிப்பு...

 


மேல்மாகாணத்தில் உள்ள அரச நிறுவனங்களுக்கு மீண்டும் "வீட்டில் இருந்து பணியாற்றும்" நடைமுறையை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.




இதற்கான சுற்று நிருபம் ஒன்றினை ஜனாதிபதி செயலாளர் பி.பி ஜயசுந்தரவினால் சகல அமைச்சுகள், அரச நிறுவனங்கள், திணைக்களங்களின் பிரதானிகள், மாகாண செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரையான காலப்பகுதியில், வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கான நடைமுறை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அதனை போன்று தற்போது, கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இந்த வீட்டில் இருந்து பணியாற்றும் நடைமுறையை முன்னெடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

அதேநேரம், ஏனைய மாவட்டங்களில் சுகாதார துறையினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளின் படி வழமையான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி செயலாளர் பி.பி ஜயசுந்தரவினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »