Our Feeds


Saturday, October 31, 2020

www.shortnews.lk

தற்போது இலங்கையில் பரவும் புதிய கொரோனா சக்தி வாய்ந்த வைரஸ் ஆகும் - இது இலங்கையில் இருந்த வைரஸ் அல்ல - ஆய்வில் பரபரப்பு தகவல்

 



தற்போது நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் ´B.1.42´ என்ற குழுவிற்கு உட்பட்ட ஒரு சக்திவாய்ந்த வைரஸ் என ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தினால் மேற்கொண்ட ஆய்வில் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.


குறித்த பல்கலைகழகத்தின் பேராசிரியர் நீலிகா மலவிகேவினால் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சின் செலயாளர் மேஜர் ஜெனரல் வைத்தியர் சஞ்சீவ முனசிங்க தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இன்று (31) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் இனங்காணப்பட்ட கந்தக்காடு மற்றும் கடற்படை கொத்தணிகளின் வைரஸ் B.1, B.2, B 1.1 மற்றும் B.4 குழுக்களுக்கு உட்பட்டவை என ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வைரஸ் விஷேடமானது எனவும் மிகவும் சக்திவாய்ந்த விதத்தில் பரவக்கூடியது எனவும் அவருடைய ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது எந்த நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்தது என்பது தொடர்பில் தொடர்ந்து ஆய்வுகள் இடம்பெற்று வருவதாகவும் நிச்சயமாக இது இலங்கையில் இருந்த வைரஸ் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »