Our Feeds


Wednesday, October 28, 2020

www.shortnews.lk

நல்லாட்சி காலத்தில் அரசாங்கத்துடன் ‎நெருங்கியவர்கள் ‎பெற்றுக்கொண்ட ‎கடன்கள்..!‎

 

 நல்லாட்சி காலத்தில் அரசாங்கத்துடன் ‎நெருங்கியவர்கள் ‎பெற்றுக்கொண்ட ‎கடன்கள்..!

 Waive off one month's bank interest on loans, suggest experts


நல்லாட்சி காலத்தில், அரச வங்கிகள் பலவற்றில் அரசாங்கத்துடன் ‎நெருங்கியவர்கள் பெற்றுக்கொண்ட பல கடன்கள் ‎செலுத்தப்படாதிருப்பதாக தெரியவந்துள்ளது.

கடந்த அரசாங்க காலத்தில் அரச வங்கிகளில் இடம்பெற்ற ‎முறைக்கேடுகள் தொடர்பாக ஆராய்வதற்காக பிரதமரால் ‎நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு இதனைக் கண்டறிந்துள்ளது.

அத்துடன், கடந்த அரசாங்க காலத்தில், அரச வங்கிகள் பலவற்றில் ‎முறையற்ற வகையில் பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டிருப்பதாக ‎தெரியவந்துள்ளது.

இதேநேரம், அரச வங்கிகளுக்கு சொந்தமான சில சொத்துகள், ‎முறையற்ற வகையில் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக ‎கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் அடிப்படையிலான ‎விசாரணைகளையும் இந்த குழு ஆரம்பித்துள்ளது.

இவ்வாறு 200க்கும் அதிகமான முறைப்பாடுகள் இந்த குழுவுக்கு ‎கிடைக்கப்பெற்றுள்ளது.

‎2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதிக்குப் பின்னர் நான்கு அரச ‎வங்கிகளில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் முறைக்கேடுகள் ‎தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக பிரதமர் மஹிந்த ‎ராஜபக்ஷ இந்த குழுவை நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ‎

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »