நியூசிலாந்து நாட்டின் முதல் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் ஒமர்.
நடைபெற்று முடிந்த தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா வின் லேபர் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற இப்ராஹிம் ஒமருக்கு வயது 42.
ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் இருந்து அகதியாக வந்த இப்ராஹிம், பகுதி நேரம் கிளீனிங் வேலை பார்த்துக்கொண்டே கல்லூரி படிப்பு வரை படித்தவர்.
லேபர் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட இப்ராஹிம், தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் நியூசிலாந்து பாராளுமன்றதில் நுழையும் முதல் ஆப்ரிக்க முஸ்லீம் எனும் கவுரவம் பெறுகிறார்.