ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை தனது அரசியல் கூட்டணியிலிருந்து வெளியேற்றத் தயாராகிறது ஐக்கிய மக்கள் சக்தி.
இதற்காக இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு அக்கட்சி அவசர கூட்டமொன்றை கூட்டவுள்ளது.
மேற்படி இரண்டு கட்சிகளின் உறுப்பினர்கள் இருபதாவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்த நிலையில் அந்த கட்சிகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்தறிய மு .கா தலைவர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்புகொண்டபோது , கட்சி உறுப்பினர்களுடன் தாம் தற்போது கலந்துரையாடலில் இருப்பதாக தெரிவித்தார்.
இதற்கிடையில் இன்று பிற்பகல் கூடவுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி நேற்று அரசுக்கு ஆதரவளித்த பதுளை எம்.பி அரவிந்த்குமாரை கூட்டணியிலிருந்து வெளியேற்றும் தீர்மானத்தை எடுக்கவுள்ளது.