உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட ஸஹ்ரான் ஹசீம் உட்பட குழுவினர் தங்கியிருந்த பாணந்துறை, பரந்த வீதியில் உள்ள வீட்டின் உரிமையாளர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நேற்று (27) ஆஜராகியிருந்தார்.
எஸ்.எம் இல்ஹாம் எனும் குறித்த நபர் முதன் முறையாக ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகி இருந்தார்.
மொஹமட் அசாம் மொஹமட் முபாரக் எனும் நபருக்கு மாதந்தம் நாற்பதாயிரம் ரூபா வாடகையின் அடிப்படையில் தனது வீட்டை வழங்கியதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
கிங்ஸ்பரி ஹோட்டலில் தாக்குதலை மேற்கொண்ட நபரின் புகைப்படத்தை காண்பித்த போது குண்டுதாரி முபாரக் என அவர் உறுதி செய்துள்ளார்.