அக்குறணை நகரின் நீண்டகால பிரச்சினைகளில் ஒன்றான மழை காலங்களில் ஏற்படும் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை பெற்றுத் தரும் நோக்கில் 12-10-2020 திங்கட்கிழமை பாராளுமன்ற உறுப்பினரும் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கெளரவ வசந்த யாப்பா பண்டார மற்றும் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் திலக் ராஜபக்ஷ ஆகியோர் அக்குறணை நகரிற்கு வருகை தந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடங்களை பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில் அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன், அக்குரணை பிரதேச சபை கெளரவ உறுப்பினர்கள், பிரதேச செயலாளர் திருமதி அபேசிங்க உட்பட அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதில், அக்குறணை பள்ளிகளின் சம்மேளனத் தலைவர், அக்குறணை வர்த்தக சங்கம் மற்றும் சில சிவில் சமூகப் பிரதிநிதிகளும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது அக்குறணை நகரிற்கு ஏற்படும் வெள்ளப்பெருக்கினை தடுப்பதற்கான வேலைத்திட்டத்தினை கூடிய விரைவில் ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வேலைத்திட்டம் பாதுகாப்பு அமைச்சினால் கண்காணிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.