ஊரடங்கு உத்தரவு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தகவல்...!
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நேற்றிரவு முதல் பாணந்துறைக்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்ககு உத்தரவானது பாணந்துறை வடக்கு மற்றும் பாணந்துறை தெற்கு ஆகிய காவல் துறை பகுதிகளிலும் நடைமுறையில் காணப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நேற்றிரவு முதல் மீள் அறிவித்தல் வரை அமுலாகும் வகையில் பாணந்துறை வடக்கு, பாணந்துறை தெற்கு, மொரட்டுவ, ஹோமாகம, ஆகிய பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.