கொரோனாவிலிருந்து மீண்ட பின்னர் முதன் முதலாக தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற ட்ரம்ப் ஆண்களையும், அழகான பெண்களையும் முத்தமிடத் தயார் எனக் கூறி முகக் கவசத்தை தூக்கியெறிந்தமை பீதியையும் சர்சையையும் கிளப்பியுள்ளது.
எதிர்வரும் நவம்பர் 3ம் திகதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மீண்டும் வேட்பாளராக களமிறங்கியுள்ள டொனால்ட் ட்ரம்ப்புக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் 4 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு வெள்ளை மாளிகை திரும்பினார்.
புலோரிடா மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் மீண்டும் பங்கேற்ற போது தான் அணிந்திருந்த முகக் கவசத்தை தூக்கியெறிந்தார். பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் முகக் கவசம் அணியாது களந்து கொண்டதுடன், சமூக இடைவெளி பேணாமல் இருந்தமையும் குறிப்பிடத் தக்கதாகும்.