(சர்ஜுன் லாபீர்)
நாட்டின் தற்போதைய காலகட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தை மீண்டும் தடுப்பதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு அரச உத்தியோகத்தர்களாகிய நாம் எல்லோரும் அர்ப்பணிப்புடனும் விழிப்புடனும் செயற்பட வேண்டும் என கல்முனை பிரதேச செயலக கணக்காளர் வை.ஹபிபுல்லா தெரிவித்தார்.
புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கான பயிற்சி நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டு இருந்தார் மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்..
தற்போதைய அரசாங்கம் எமது நாட்டில் அதிவேகமாக பரவிக்கொண்டு வரும் கொரோனா நோய்க்கான தடுப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது. இதற்காக நாட்டில் உள்ள சுகாதார துறைசார்ந்தோர்களும், முப்படையினர்களும் அர்பணிப்புண்டன் நமது மக்களுக்காகவும்,நாட்டுக்காகவு ம் பாடுபடுகின்றார்கள்.எனவே அரசாங்கத்தின் நிர்வாக ரீதியில் கடமைமைகளை செவ்வனே நிறைவு செய்கின்ற நாம் எல்லோரும் அரசாங்கத்தின் கொரோனா விழிப்புணர்வு மற்றும் கட்டுப்பாடு செயற்பாடுகளை மக்கள் மத்தியில் கடைப்பிடிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள முன்வர வேண்டும்.என்பதோடு கிராம சேவர்கள் பிரிவுகளில் கடமையாற்றும் கிராம சேவர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய கள உத்தியோகத்தர்கள் அனைவரும் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடுகளின் சுகாதார தரப்பினரோடும் முப்படைகளோடும் ஒத்துழைப்பு வழங்கி திறன்பட செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் மக்களுக்கான சேவைகளை வழங்குவதில் அரசாங்க உத்தியோகத்தர்கள் எந்நேரத்திலும் தங்களை முழுமையாக தாயர்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு செயற்பாடுக்கும் தங்களுடைய ஒத்துழைப்புகளையும் ஒத்தாசைகளையும் வழங்க வேண்டும் என்பதோடு நாம் எல்லோருக்கும் மக்களுக்காக சேவையாற்றுகின்ற பொறுப்பு வழங்கப்பட்டு இருப்பதானது நமக்கு கிடைத்த பெரும் பாக்கியம் என எண்ணி துணிவுடன் செயலாற்ற முன்வாருங்கள் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.