Our Feeds


Monday, October 26, 2020

www.shortnews.lk

சில வேலை முழு நாட்டையும் முடக்க வேண்டி வரும் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

 


மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சிலவேளை முழுநாட்டையும் முடக்குவது அவசியமாகு​மென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில்   இலங்கைக்கான தூதுவர் டொமினிக் ஃபர்க்லர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே, பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். .

இரண்டுந நாடுகளுக்கு இடையிலான முதலீடுகள், ஏற்றுமதி, சுற்றுலாத்துறை ஆகியன தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளனர். அத்துடன், கொவிட்-19க்கு எதிரான செயற்பாடுகள் குறித்தும் இருவரும் ஆராய்ந்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »