தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைவாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்த ஹட்டன் நகரில் உள்ள அனைத்து விற்பனை நிலையங்களையும் இன்று (31) தொடக்கம் மீண்டும் திறக்கப்படுவதாக ஹட்டன்-டிக்கோயா நகரசபை தலைவர் சடையன் பாலச்சந்திரன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
கடந்த 27ஆம் திகதி கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான 11 பேர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து ஹட்டன் நகரம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், கடந்த காலங்களில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் பணியாற்றியிருந்த ஹட்டன் பொதுச் சந்தை வளாகத்தில் உள்ள கடைகள் அனைத்தையும் அதன் உரிமையாளர்கள் அனுமதியின்றி திறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, குறித்த பொதுச் சந்தை வளாகத்தை மூடுவதற்கு ஆலோசனை வழங்கச் சென்ற ஹட்டன்-டிக்கோயா நகரசபையின் பொது சுகாதார பரிசோதகர்களுக்கும் வியாபாரிகளுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, மறு அறிவித்தல் வரை கடைகளை திறக்க வேண்டாமென பொது சுகாதார பரிசோதகர்கள் இதன்போது கடுமையாக எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஹட்டன் நகரில் உள்ள பெரும்பாலான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்ட போதிலும் ஹட்டன் நகருக்கு வருகைத் தரும் மக்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Saturday, October 31, 2020
ஹட்டன் வர்த்தக நிலையங்கள் மீண்டும் திறப்பு- சுகாதார பரிசோதகர்களுடன் கருத்து முரண்பாடு.
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »