Our Feeds


Saturday, October 31, 2020

www.shortnews.lk

இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவர் இலங்கை வந்தடைந்தார்..

 

இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவர் கி ஸென்ஹொன்ங் நாட்டை ‎வந்தடைந்துள்ளதாக கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்தது.

இலங்கை்கு வருவதற்கு முன்னரே அவரிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் ‎முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வாரங்கள் அவர் ‎சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சீனத் தூதரகம் ‎வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையில் தற்போதுள்ள கொரோனா நிலைமையை கருத்திற் ‎கொண்டு தமக்கான வரவேற்பு ஏற்பாடுகளை புதிய தூதுவர் மறுத்துள்ளதாகவும் ‎சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இலங்கையுடன் இணைந்து இருநாடுகளுக்கும் நன்மை பயக்கும் வகையில் ‎பட்டுப்பாதைத் திட்டத்தை முன்னெடுக்கவும் தாம் தயாராகவுள்ளதாக ‎இலங்கை்கான புதிய சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார். ‎

 


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »